• May 27, 2025
  • NewsEditor
  • 0

சேலம்​/தரு​மபுரி: மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் 111.73 அடி​யாக உயர்ந்​துள்​ளது. மேலும், நீர்​வரத்து விநாடிக்கு 3,548 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​யில் பெய்​து​வரும் மழை​யால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 2,878 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை விநாடிக்கு 3,548 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது.

அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்​படு​கிறது. நேற்று முன்​தினம் 111.60 அடி​யாக இருந்த அணை​யின் நீர்​மட்​டம் நேற்று காலை 111.73 அடி​யாக உயர்ந்​துள்​ளது. அணை​யில் 80.89 டிஎம்சி நீர் இருப்பு உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *