
‘பஞ்சாப் வெற்றி!’
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.
‘ஜெயிக்கிறதுதான் லட்சியம் – ஸ்ரேயஸ் ஐயர்!’
ஸ்ரேயஸ் ஐயர் பேசியதாவது, ‘முதல் போட்டியிலிருந்தே போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதை மட்டும்தான் எங்களின் ஒரே இலக்காக வைத்திருந்தோம். ஒவ்வொரு போட்டியிலும் சரியான சமயத்தில் ஒவ்வொரு வீரர்கள் முன் வந்து சிறப்பாக ஆடியிருந்தார்கள்
எங்களின் ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலும் ஆரோக்கியமானதாக இருக்கிறது. வீரர்களை நிர்வகிக்கும் வேலைகளையெல்லாம் ரிக்கி பாண்டிங் பார்த்துகொள்கிறார். நான் எல்லாருடைய நம்பிக்கையையும் சம்பாதிக்க வேண்டியிருந்தது. போட்டிகளை வெல்வதன் மூலம்தான் அதை சாதிக்க முடியும் என எனக்குத் தெரியும். ரிக்கி பாண்டிங்கும் நானும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாக பயணித்து வருகிறோம்.

நான் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதற்கான வெளியை அவர் ஏற்படுத்திக் கொடுக்கிறார். ஜாஷ் இங்லீஷ் புதிய பந்தில் ஆட வேண்டும் என்பதில் விருப்பமாக இருந்தார். அவர் முக்கியமான ஆட்டங்களில் சிறப்பாக செயல்படக்கூடியவர் என எங்களுக்குத் தெரியும். அவர் நிறைய பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என நாங்களும் விரும்பினோம். அதனால்தான் என்னுடைய ஆர்டரை மாற்றிக் கொண்டு அவரை நம்பர் 3 இல் இறக்கினோம்.’ என்றார்.