
சென்னை: மாவோயிஸ்டுகள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசும் சத்தீஸ்கர் மாநில அரசும் உடனடியாக கைவிட்டு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் கட்சிகளின் சார்பில் ஜூன் 2 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “ஒன்றிய அரசும், பாஜகவின் சத்தீஸ்கர் மாநில அரசும் நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை ஆயுதப் படைகளை கொண்டு தீவிரமாக அழித்து ஒழித்து வருகின்றன. கடந்த 22-ம் தேதி ஒரு நாள் மட்டும் 27 பேர் கொடூராமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.