
சென்னை: பனாரஸ் ரயில் இன்ஜின் பணிமனையில் நடைபெற்ற மின்சார ரயில் இன்ஜின்களுக்கான கேப் மேம்படுத்தல் போட்டியில் தெற்கு ரயில்வேயின் ராயபுரம் ரயில் இன்ஜின் பணிமனை முதல் பரிசை வென்றுள்ளது.
பனாரஸ் இன்ஜின் பணிமனையில் 42 வது மின்சார லோகோ பராமரிப்பு ஆய்வுக் குழு கூட்டம் மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக இந்திய ரயில்வேயில் மின்சார இன்ஜின்களுக்கான அழகுப் போட்டி என்று அழைக்கப்படும் கேப் மேம்படுத்தல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், 16 ரயில்வே மண்டலங்களும், 3 ரயில்வே உற்பத்தி ஆலைகளும் பங்கேற்றன.