• May 26, 2025
  • NewsEditor
  • 0

மிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மண்டல பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் கடந்த மாதம் கோவையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வடக்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களை ஒருங்கேயிணைத்து 2-ம் கட்ட பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் த.வெ.க தலைவர் விஜய், அதற்கான இடம் தேர்வில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை களமிறக்கிவிட்டிருக்கிறார். முன்னதாக இன்று (26-5-2025) காலை, மேல்மருவத்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு வந்தார்.

புஸ்ஸி ஆனந்த்

ஆரணியில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு வேலூர் அருகிலுள்ள பள்ளிகொண்டா கந்தனேரிக்கு மாலை 6.30 மணியளவில் வந்தார். கந்தனேரியில், பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டிய விசாலமான இடத்தை கருந்தரங்கிற்காக தேர்வு செய்யலாமா? என்று பார்வையிட்டு வேலூர் மாவட்ட த.வெ.க நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். பிறகு வேலூரில் இருந்து புறப்பட்டு சென்றார் புஸ்ஸி ஆனந்த். அப்போது, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மேற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இம்தியாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *