
கோவை: கோவையில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநகர சாலைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவையில் நேற்று இரவு முதல் சிறிது நேரம் சாரல் மழையாகவும், சில மணி நேரம் கன மழையாகவும் பெய்கிறது. கோவையில் நகரப் பகுதிகளை விட, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், கனமழையின் தாக்கம் அதிகளவில் உள்ளது. மழையின் காரணமாக மாநகர் மற்றும் புறநகரப் பகுதிகளில் உள்ள சாலையோர தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.