• May 26, 2025
  • NewsEditor
  • 0

நடப்பு ஐபிஎல் சீசனில் இன்னும் இரண்டு லீக் போட்டிகள்தான் இருக்கிறது.

பிளேஆஃப் சுற்றுக்கு நான்கு அணிகள் ஏற்கெனவே முன்னேறிவிட்டாலும், புள்ளிப்பட்டியலில் அந்த நான்கு அணிகளில் முதல் இரண்டு இடங்களை எந்த அணிகள் பிடிக்கப்போகிறது என்பதை இந்த இரண்டு லீக் போட்டிகள்தான் முடிவு செய்யப்போகிறது.

அதில், ஒரு போட்டிதான் பஞ்சாப் vs மும்பை இன்றைய போட்டி.

ஸ்ரேயஸ் ஐயர் – ஹர்திக் பாண்டியா

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி நிச்சயம் முதல் இரண்டு இடங்களில் தனது இடத்தை உறுதி செய்துவிடும்.

ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர், “பேச்சை விட செயலில் காட்டுகிறேன். நான் அவர்களுக்கு (அணியினர்) சில மோட்டிவேஷன் தருவேன். பிறகு களத்தில் செயல்படுத்துவது அவர்களின் வேலை.

ஜேமிசன், விஜய்குமார் வைஷாக் பிளெயிங் லெவனில் இருக்கிறார்கள். மைதானத்தின் அளவு, காற்று ஆகிய காரணிகளால் இந்த மைதானம் இரு அணிக்கும் ஏற்றது.

ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர்

இன்றைய நாளை எப்போதும் போன்ற ஒருநாளாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆட்டத்தையும், மனநிலையையும் மேம்படுத்த வேண்டும்.

கடுமையான அழுத்தத்திலிருந்து மேலே வருபவன் நான். உங்கள் கால்களை நீங்கள் முன்னோக்கி வைக்கவேண்டும். தவறுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது” என்று கூறினார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயரை இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் பிசிசிஐ தேர்வுக்குழு தேர்வு செய்யாததற்கு சேவாக் உட்பட பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *