
உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை அடுத்து மதுரையில் தென் மாவட்ட குண்டர் சட்ட கைதிகளுக் கான அறிவுரைக் குழுமம் ஆக.1 முதல் செயல்பட உள்ளது.
நாட்டில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மொத்த குண்டர் சட்ட கைதுகளில் தமிழகத்தின் பங்கு 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 2,500 பேர் வரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். குண்டர் சட்டத்தில் கைதாகும் நபரை 90 நாட்கள் வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்படும். தடுப்புக் காவல் பிறப்பிக்கப்பட்டு 30 முதல் 40 நாட்களில் சம்பந்தப்பட்ட நபரை அறிவுரைக் குழுமம் முன் போலீஸார் ஆஜர்படுத்துவது வழக்கம்.