
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்த்தை அமெரிக்காவும், பற ஐரோப்பிய நாடுகளும் செய்துகொண்டு தான் வருகின்றன. பேச்சுவார்த்தையின் போதெல்லாம் ‘ஓகே’ சொல்லிவிட்டு, தங்களது நாட்டிற்கு சென்ற உடன் தாக்குதல், பதில் தாக்குதலை நடக்க தொடங்கிவிடுகின்றன இரு நாடுகளும்.
இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது…
“எனக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் எப்போதும் நல்ல உறவு இருந்துள்ளது. ஆனால், இப்போது அவருக்கு என்னவோ ஆகிவிட்டது. அவர் பைத்தியமாகிவிட்டார். அவர் தேவையில்லாமல் பல மக்களின் உயிர்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்… நான் ராணுவ வீரர்களை மட்டும் சொல்லவில்லை.
ஏவுகணைகளும், ட்ரோன்களும் எந்தக் காரணமும் இல்லாமல் உக்ரைன் நகரங்களின்மீது ஏவப்படுகின்றன.
அவருக்கு உக்ரைனின் ஒரு பகுதி மட்டுமே வேண்டாம்… உக்ரைனே வேண்டும் – இதை நான் முன்பிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், இதை மெய்ப்பிப்பது போல அவர் எதாவது செய்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
அதே மாதிரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அவர் பேசுவதுபோல, அவர் நாட்டிற்கு எதுவும் செய்வதில்லை. அவர் வாயில் வந்து விழும் அனைத்துமே பிரச்னையைத் தான் உருவாக்குகிறது. அது எனக்கு பிடிக்கவில்லை. இதை நிறுத்திவிடுவது நல்லது.
அப்போது நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், இந்தப் போரே தொடங்கி இருக்காது. இது ஜெலன்ஸ்கி, புதின், பைடனின் போர். ட்ரம்ப் உடையது அல்ல.
திறமையின்மை, வெறுப்பால் தொடங்கப்பட்ட பெரிய மற்றும் அழகற்ற தீயரி அணைக்க மட்டுமே நான் உதவுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – May 25, 2025, 8:46 PM ET )I’ve always had a very good relationship with Vladimir Putin of Russia, but something has happened to him. He has gone absolutely CRAZY! He is needlessly killing a lot of people, and I’m not… pic.twitter.com/4hzGWP347H
— Donald J. Trump TRUTH POSTS (@TruthTrumpPosts) May 26, 2025