
சென்னை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்தவகையில் தேமுதிக தனது கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக மாற்றி அமைத்து வருகிறது. சமீபத்தில், தமிழக முழுவதும் மண்டல பொறுப்பாளர்களை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்தார். தொடர்ந்து தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.