
கொடைக்கானல்: பருவ மழை தொடங்கியதால் முன்னெச்சரிக்கையாக கொடைக்கானலுக்கு நேற்று பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி உள்ளது. இதையடுத்து, ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.