
எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ‘டிராபிக் ராமசாமி’ படத்தை இயக்கியவர், விக்கி. அடுத்து ‘கூரன்’ என்ற படத்தைத் தயாரித்தார். இவர் இப்போது ‘வீரசிங்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஈழப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் நடித்துள்ளனர்.
இதுபற்றி இயக்குநர் விக்கியிடம் கேட்டபோது, “திரைப்பட விழாக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த படம் அரசியல் நையாண்டியை மையமாகக் கொண்டது. ‘வீரசிங்கம்’ என்ற கேரக்டரை பற்றிய இந்தக் கதையில் லக்‌ஷன், இளங்கோ ஆகியோர் நடித்துள்ளனர். லைவ் சவுண்ட்டை பயன்படுத்தி இதை உருவாக்கி இருக்கிறோம்.