
உன்னி முகுந்தனின் பான் இந்தியா படமான, ‘மார்கோ’வை தயாரித்த ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அடுத்துத் தயாரிக்கும் படம் ‘கட்டாளன்’.
பால் ஜார்ஜ் இயக்கும் இதில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர், மலையாளத்தில் வெற்றி பெற்ற அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு, ஆர்டிஎக்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார். த்ரில்லர் படமான இதன் முதல் தோற்ற போஸ்டர் வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்தப் படத்தில் 'காந்தாரா' இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத் இணைந்துள்ளார்.