
கோவை: நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உபகரணங்களுடன் மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மத்திய அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மே 25 மற்றும் மே 26ல் அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தினரால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.