
சென்னை: பெயரளவிலான திட்டங்களைச் செயல்படுத்தாமல் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டின் தீராத பெருந்துயரங்களில் குறிப்பிடத்தக்கது ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளும், அதனால் அப்பாவி பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் தான். இது குறித்து தமிழக அரசுக்கு தெரிந்திருந்தும், ராணிப்பேட்டை அமைச்சரின் தொகுதியாக இருந்தும் இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.