
‘குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்!”
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி அஹமதாபாத்தில் நடந்து வருகிறது. சென்னை அணியின் கடைசி லீக் போட்டி என்பதால் தோனி என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தோனிதான் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தன்னுடைய உடல்நிலை குறித்தும் பேசியிருந்தார்.
‘அது கஷ்டம்தான்!’ – தோனி
டாஸில் தோனி பேசியவை, ‘நாங்கள் முதலில் பேட் செய்யப்போகிறோம். பேட்டிங் ஆட நல்ல பிட்ச்சாக இருக்கிறது. உடல்நிலையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் எனக்குப் பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. அதுவும் கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கும்போது உடல்நிலையைப் பேணுவது ரொம்பவே முக்கியமானது.
அணியின் பயிற்சியாளர் குழு இதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. நான் இப்போது வரை சர்வைவ் ஆகிவிட்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும்போது எனது உடல்நிலையில் பெரிதாகப் பிரச்னைகள் இருந்ததில்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். சென்னை அணியின் மைதானம் முன்பு போல இல்லை.

இப்போது மாலை நேரங்களில் அவ்வளவு சூடாக இருப்பதில்லை. சென்னையைவிட இங்கே வெயில் அதிகம். இன்றைய போட்டியில் அஷ்வினுக்கு பதில் தீபக் ஹூடா ஆடுகிறார்.’ என்றார்.