
புதுச்சேரி: "நிதி ஆயோக்கில் பங்கேற்காததுடன் மாநில அந்தஸ்துக்காக முதல்வர் ரங்கசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்தை போராடி பெறுவோம். அதுதான் எங்கள் இலக்கு. அதற்காக நீதிமன்றத்தையும் நாடுவோம்" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாகவே அவர் கலந்துகொள்ளாமல் உள்ளார்.