
நடிகர் யாஷின் தாயார் புஷ்பா அருண்குமார், புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக, பி.ஏ புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் அவர் தயாரிக்கும் முதல் படம், ‘கொத்தாலாவாடி’.
கன்னடத்தில் உருவாகும் இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு மலையாளத்திலும் படங்களைத் தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘கொத்தாலாவாடி’ படத்தில், பிருத்வி அம்பார் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக காவ்யா ஷைவா நடிக்கிறார். கோபால் தேஷ்பாண்டே, ராஜேஷ் நடரங்கா, அவினாஷ், காவ்யா ஷைவா, மான்சி சுதிர், ரகு ரமனகோப்பா, சேத்தன் காந்தரவா முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.