
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தொடர்ந்து இராண்டாவது முறை எம்பி-யாக இருப்பவர் கே.நவாஸ்கனி. இவர் அண்மையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல் இது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே அக்கட்சியின் தேசியச் செயலாளர் பதவி பெற்றுவிட்டீர்களே? கட்சியில் தகுதியான சீனியர்கள் யாரும் இல்லை என்பதுதான் காரணமா?