
கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த உ.பி.யைச் சேர்ந்த 104 வயது கைதி விடுவிக்கப்பட்டார்.
உத்தர பிரதேசம் கவுசாம்பி மாவட்டம் கவுராயே கிராமத்தைச் சேர்ந்தவர் லகான். இவர் கடந்த 1921-ம் ஆண்டு பிறந்தவர். இவர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கடந்த 1977-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் பிரபு சரோஜ் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பிரயாக்ராஜ் நீதிமன்றம் கடந்த 1982-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 3 பேர் இறந்துவிட்டனர்.