
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியது. தமிழகத்திலும் மழை பரவியுள்ள நிலையில், இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நேற்று (மே 24) தொடங்கியது. தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழை பெரும்பாலான பகுதிகளில் பரவியுள்ளது. அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.