
புதுக்கோட்டை: எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. நாங்கள் இ.டி. மட்டுமல்ல, மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, “அனைத்துத் துறை அலுவலர்களும் பொதுமக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்து, அரசின் திட்டங்களை மக்களிடையே சென்றடையச் செய்து, அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.