
“மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம் மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று நினைப்பேன். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்று நடிகர் சிலம்பரசன் கண்கலங்கியபடி பேசினார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா இன்று (மே 24) நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு பேசும்போது, “சிறுவயதில் எல்லா பசங்களையும் வெளியே அழைத்துச் செல்வார்கள். சாக்லேட் வாங்கித் தருவார்கள். படத்துக்கு, கடற்கரைக்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால் பிறந்தது முதலே எனக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம் மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று நினைப்பேன்.