
சென்னை: கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “கேரள முதல்வரும், எனது அன்புத் தோழருமான பினராயி விஜயனுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முற்போக்கான அரசு நிர்வாகத்தின் மீதான தங்களது அர்ப்பணிப்பும், கூட்டாட்சியியல் மற்றும் மதச்சார்பின்மை மீதான நமது உறுதிப்பாடும் தமிழ்நாடு – கேரள உறவினை வலுப்படுத்துகின்றன.