
திரைப்படத்தை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள் என்று நடிகர் சூரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படம் பி மற்றும் சி சென்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனிடையே, இதனை பதிவிறக்கம் செய்து பார்ப்பதும் அதிகமாகி இருக்கிறது.