
ஸ்ரீநகர்: "பூஞ்ச் மக்கள் இரண்டு மூன்று முக்கியமான விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளனர். அவைகளை தேசிய அளவில் எழுப்புவேன்" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய குண்டுவீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று சந்தித்தார். காலையில் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி அங்கிருந்து பூஞ்ச் சென்றார். அங்கு கிறிஸ்ட் பள்ளிக்குச் சென்ற அவர் பாகிஸ்தான் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார்.