
சென்னை: ஆபத்தில் சிக்கிக் கொண்டவர்கள், உடனடியாக 100ஐ தொடர்பு கொண்டு, காவல்துறையை அழைத்து பயன்பெறுங்கள் என காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுத்து நிறுத்த போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் ஆபத்தில் இருப்பவர்கள் அதுகுறித்த தகவல்களை அவசர அழைப்பு எண்ணான 100க்கு தொடர்பு கொண்டு உடனடியாக தெரிவித்தால் போலீஸார் சம்பவ இடம் விரைந்து உதவ, உதவியாக இருக்கும் என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். மேலும், 5 முதல் 10 நிமிடங்களுக்குள் ரோந்து போலீஸார் நிகழ்விடம் வந்து உதவிக்கரம் நீட்டுவார்கள் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.