• May 24, 2025
  • NewsEditor
  • 0

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந்தியா, பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைக் குறிவைத்து, அதிரடியாக நடத்தியது.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதலை மே 8 ஆம் தேதி இரவு நடத்தியது. அதனை வானிலேயே தடுத்து அழித்ததாக தெரிவித்தது இந்திய ராணுவம்.

”ஆபரேஷன் சிந்தூர்” சேலை –

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த விஜய் பவசிங் என்ற நெசவாளரின் சேலை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஒரு பனாராசி சேலையை விஜய் பவசிங் வடிவமைத்துள்ளார்.

இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் விதமாகவும் பெருமை கொள்ளும் விதமாகவும் ரபேல், எஸ் 400 உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுதங்களை வரைபடங்களாக சேலையில் வடிவமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த சேலையில் `ஆபரேஷன் சிந்தூர்’ எனவும் எழுத்தில் நெய்துள்ளனர்.

இந்த சேலையை கேப்டன் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருக்கு நேரில் வழங்க உள்ளதாக நெசவாளர் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த பனாராசி சேலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *