
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியில், 3-வது ஆண்டு படிக்கும் மாணவியை அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர் சினிமாவிற்கு செல்லலாம் என்று கூறி அழைத்துள்ளார். மாணவியும் அவரை நம்பி இரவு 10 மணிக்கு சினிமாவுக்கு கிளம்பியுள்ளார்.
சினிமாவிற்கு செல்லும் வழியில் நண்பர் வீடு இருக்கிறது என்றும், அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு செல்லலாம் என்று கூறி மாணவியை அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஏற்கெனவே மாணவியுடன் படிக்கும் மற்றொரு மாணவர் உள்பட மேலும் இரண்டு பேர் இருந்தனர். மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தினர். மாணவிக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்தனர். மாணவியும் அவர்கள் கொடுத்ததை குடித்தார். ஆனால் மாணவர்கள் இரண்டு பேரும் மாணவிக்கு கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்தனர். அதனை குடித்த உடன் மாணவிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.
இதனை பயன்படுத்தின் மூன்று பேரும் அம்மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
மயக்கம் தெளிந்து மாணவி எழுந்த போது இது குறித்து வெளியில் சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டிய நிலை வரும் என்று கூறி மாணவியை மிரட்டி அனுப்பினர்.
ஆனால், மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர்கள் உடனே போலீஸில் புகார் செய்தனர்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் கைது செய்து செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரை பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் இரண்டு பேரும் புனே மற்றும் சோலாப்பூரை சேர்ந்தவர்கள்.
போலீஸார் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கைதான மாணவர்கள் 20 முதல் 22 வயதுடையவர்கள் ஆவர். அவர்களை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.