• May 24, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை எதிர்க்கட்சிகள் விடாது துரத்திக் கொண்டிருக்கின்றன. அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சந்தனக் கட்டைகளும், போலி மது பாட்டில்களும் சிக்கியதே துரத்தலுக்கான துருப்புச் சீட்டு!

உள​வாய்க்​காலில் அமைச்​சர் தரப்​புக்​குச் சொந்​த​மான தேனீ பண்ணை என்ற இடம் உள்​ளது. இங்கு செயல்​பட்டு வந்த தனி​யார் நிறு​வனத்​தில் கடந்த ஆண்டு 6 டன் சந்​தனக் கட்​டைகளை சேலம் வனத்​துறை​யினர் பறி​முதல் செய்​தனர். இவை சந்தன எண்​ணெய் எடுப்​ப​தற்​காக கடத்​திவரப்​பட்​ட​தாக அப்​போது சொல்​லப்​பட்​டது. அதேசம​யம், “இதற்​கும் எனக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. எனது இடத்தை வாடகைக்கு எடுத்​திருந்​தவர்​கள் இந்​தக் காரி​யத்​தைச் செய்​திருக்​கி​றார்​கள்” என அப்​போது தேனீ ஜெயக்​கு​மார் தன்​னிலை விளக்​கம் கொடுத்​தார். இருந்​த​போதும் அப்​போது இந்த விவ​காரத்தை அமைச்​சருக்கு எதி​ராக ஊதிப் பெரி​தாக்கி ஓய்ந்தன எதிர்க்​கட்​சிகள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *