
தூத்துக்குடி: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமலாக்கத் துறை சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்தால் கட்டாயம் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனால், அமலாக்கத் துறை சோதனைக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. எனவே, உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.