
சரண்: “நான் வாக்குகள் கேட்க மாட்டேன். மாறாக நான் வறுமையில் இருந்து நீங்கள் மீள உங்களுக்கு வழி சொல்வேன். அதை நீங்கள் கேட்டால், பின்பு விரும்புகிறவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க முடியும்.” என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிஹாரின் சரண் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரஷாந்த் கிஷோர் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக நான் பிஹார் முழுவதும் சுற்றி வருகிறேன். இதில் இரண்டு வருடம் நடைபயணமாக சென்றதும் அடங்கும். நான் 5,000 கிராமங்களை நடந்தே சென்று அடைந்திருக்கிறேன். நான் யாரிடமும் வாக்குகள் கேட்கவில்லை.ஏன்?