
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதிக்குள் வறுமையற்ற மாநிலமாக மாறும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
எல்டிஎப் அரசின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “நாட்டிலேயே மிகக் குறைந்த வறுமை நிலைகளை கேரளா தொடர்ந்து கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் வலுவான மற்றும் திறமையான பொது விநியோக முறை மூலம் இதை அடைய முடிந்தது.