• May 23, 2025
  • NewsEditor
  • 0

‘பெங்களூரு vs ஹைதராபாத்!’

பெங்களூரு அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதருக்கு காயம் காரணமாக இந்தப் போட்டியில் கேப்டனாக செயல்படவில்லை.

Jithesh Sharma

அவருக்குப் பதிலாக ஜித்தேஷ் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஜித்தேஷ் சர்மாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்திருந்தார்.

‘புதிய கேப்டன் ஜித்தேஷ் சர்மா!’

டாஸில் அவர் பேசியவை, ‘ஆர்சிபிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். கடந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட்டிருக்கிறேன். வெற்றி தோல்வியை கடந்து எங்களின் ட்ரெஸ்ஸிங் ரூமில் நல்ல சூழலால நிரம்பியிருக்கிறது.

Jithesh Sharma
Jithesh Sharma

எங்களின் அணி நிர்வாகமும் வீரர்களை நன்றாக கவனித்துக் கொள்கிறது. ரஜத் பட்டிதர் இம்பாக்ட் ப்ளேயராக வருவார். தேவ்தத் படிக்கல் காயமடைந்திருக்கிறார். அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வாலை லெவனில் எடுத்திருக்கிறோம். நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். இந்த பிட்ச் எங்களுக்கு அவ்வளவு பழக்கமானது. பிட்ச்சை புரிந்து கொள்ள முதலில் பந்து வீசுவது உதவும் என நினைக்கிறேன். நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் வென்று கோப்பையையும் வெல்ல வேண்டும் என நினைக்கிறேன்.’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *