
‘புகாரளித்த சவுக்கு சங்கர்!’
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை சார்புச் செயலாளரை சந்தித்து, தன்னுடைய ஊடக அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களையும் சந்தித்திருந்தார்.
‘குற்றஞசாட்டும் சவுக்கு சங்கர்!’
அவர் பேசியதாவது, ‘சவுக்கு ஊடகத்தை முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சென்னை மாநகராட்சி ஆணையாளர் அருண் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சவுக்கு மீடியாவை சேர்ந்த கேமரா மேன் ஜெயப்பிரகாஷ், வீடியோ எடிட்டர் சத்யமூர்த்தி ஆகியோரை நேற்றிரவு 11:30 மணியளவில் கே.கே.நகர் மற்றும் திருமங்கலம் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் வீட்டிற்கே வந்து அழைத்து சென்றிருக்கின்றனர்.
2023 இல் ஜெயப்பிரகாஷ் ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றதாக சொல்கிறார்கள். அபராதம் மட்டுமே கட்டும் அளவுக்கான தவறுக்கு காவல்நிலையம் அழைத்துச் செல்வது நியாயமா? ஊடகத்தில் நான் பேசும் விஷயங்களுக்கு அவர்கள் எப்படி பொறுப்பாக முடியுமா? துப்புரவு தொழிலாளர்களுக்கு கழிவு நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கிய விவகாரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகையோடு இணைந்துகொண்டு காவல்துறை ஆணையர் அருண் இப்படியெல்லாம் செய்கிறார். இப்போது அருண் மீது புகாரளித்துவிட்டு வந்திருக்கிறேன். அருண் தனது அதிகாரத்தை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகிறார். அதை தமிழகத்தின் பொம்மை முதல்வர் வேடிக்கைப் பார்த்து வருகிறார்.’ என்றார்.