
அயோத்தி: “பயங்கரவாதம் ஒரு நாள் பாகிஸ்தானை மூழ்கடிக்கும்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக எச்சரித்தார்.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, ஸ்ரீ ஹனுமன் கர்ஹி மந்திரில் 'ஸ்ரீ ஹனுமத் கதா மண்டபம்' திறப்பு விழா நடத்திய பிறகு பேசிய யோகி ஆதித்யநாத், “இது புதிய இந்தியா. புதிய இந்தியா யாரையும் சீண்டுவதில்லை. ஆனால், யாராவது அதை சீண்டிவிட்டுச் சென்றால், அது அவரை விட்டு வைப்பதில்லை. ஹனுமானும் அதையேதான் சொன்னார். ராவணன் அவர் முன் தோன்றியபோது, ராவணன் அனுமனிடம், "நீ ஏன் என் மகனைக் கொன்றாய்?" என்று கேட்டார். அதற்கு நான் அக்‌ஷய குமாரனைக் கொல்லவில்லை. அவனை பழிவாங்கினேன். அவனுக்கு எந்த பலமும் இல்லாததால் அவன் இறந்தான் என்று கூறினார்" என்று தற்போதைய சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு பேசினார்.