• May 23, 2025
  • NewsEditor
  • 0

மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில் இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் குறித்து இணையவாசிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இன்றும் பிரபலமாக இருக்கும் மைசூர் சாண்டல் சோப்பு 1916 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மைசூர் மன்னர், கிருஷ்ண ராஜா உடையார் IV, 1900 -களில் முற்பகுதியில் பெங்களூரில் அரசாங்கம் சார்பில் சோப்பு தொழிற்சாலையை நிறுவினர்.

அப்போதிலிருந்தே கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) தயாரிக்கும் இந்த சோப்பு, கர்நாடகாவில் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில் இரண்டு வருடத்திற்கு ரூபாய் 6.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவுதான் இணையத்தில் பெறும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கன்னட நடிகர்களை தேர்வு செய்யாமல் பாலிவுட் நடிகையான தமன்னாவை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று சமூக ஊடக பயனர்கள் பலரும் தங்களது அதிருப்பியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கன்னட அமைப்புகளும் இதற்கு கன்னட நடிகர்களை தேர்வு செய்யாதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

Tamannaah | தமன்னா

இதற்கிடையில் கன்னட நடிகைகளை தேர்வு செய்யாதது குறித்து மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பு அமைச்சர் எம்.பி பாட்டீல் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தெரிவித்துள்ளார்.

”இந்திய அளவில் பிரபலமான ஒரு முகம் தேவைப்பட்டதால் தமன்னா தேர்வு செய்யப்பட்டதாகவும், சந்தைப்படுத்துதல் நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

2028-ம் ஆண்டுக்குள் மைசூர் சாண்டல் நிறுவனத்தின் வருவாயை ரூ.5,000 கோடியாக அதிகரிப்பதே இதன் நோக்கம்” என்றும் பாட்டீல் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *