
சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.