• May 23, 2025
  • NewsEditor
  • 0

விமானத்தில் பயணித்தபோது முன்பின் தெரியாத பயணிக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணுக்கு $ 77,272 ( இந்திய மதிப்பில் தோராயமாக 64 லட்சமாகும்) அபராதம் விதித்துள்ளனர்.

லாஸ் வேகாஸிலிருந்து அட்லாண்டா செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்ன நடந்தது?

விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே சக பயணியிடம் அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் வித்தியாசமாக நடந்து கொள்ள தொடங்கி இருக்கிறார். முன்பின் தெரியாத அருகில் அமர்ந்திருந்த பயணியிடம் ஒரு பெண், அவரை கட்டிப்புடித்து முத்தமிட முயன்றுள்ளார்.

Flight

இதற்கு அந்த அருகில் இருந்த பயணி மறுப்பு தெரிவிக்கவே அந்தப் பெண் ஆக்ரோஷமாக மாறி கூச்சலிட தொடங்கியுள்ளார். இதனையடுத்து விமான குழுவினர், அங்கு விரைந்து வந்து நிலைமையை தணிக்க முயற்சி செய்தனர்.

ஆனாலும் அந்தப் பெண் தனது இருக்கையை விட்டு வெளியேறி அருகில் இருந்த இருக்கைகளுக்கெல்லாம் சென்று கூச்சலிட தொடங்கி இருக்கிறார்.

சிறிது நேரத்திலேயே அந்த விமானத்தில் பதட்டமான சூழல் ஏற்படுகிறது. விமான குழுவினர் அந்த பெண்ணை கட்டுப்படுத்தி விமானத்தின் பின்புறத்தில் ஒரு இருக்கை அமர வைக்கிறார்கள். 3 மணி நேரம் பதட்டமான சூழலை அந்த விமான எதிர்கொள்கிறது. அதன் பின்னர் அட்லாண்டா விமான நிலையத்தில் விமான தரையிறக்கப்பட்டது.

Flight

அதன் பின்னர் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்ட அந்த பெண்ணை FAA (Federal Aviation Administration) அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டது. இவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்டதற்காக அந்த பெண்ணிற்கு $77,272 ( தோராயமாக 64 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.

விமான பணியாளர்களின் அறிவுறுத்தலை பின்பற்ற தவறியது மற்றும் சக பயணிகளை உடல் ரீதியாக தாக்கியது என விமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய தொகை கொண்ட அபராதம் அமெரிக்க விமான போக்குவரத்து வரலாற்றில் ஒரு பயணிக்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்று எனவும் கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *