
புதுடெல்லி: நாட்டை பாதுகாக்கும் பணியில் வீர தீர செயல்கள் புரிந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று விருதுகளை வழங்கினார்.
பாதுகாப்பு படையினருக்கான வீர தீர விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 26 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு சவுரியா சக்ரா விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்.