
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரில் பாகிஸ்தானுக்கு துருக்கி வெளிப்படையாக ஆதரவு அளித்தது. பாகிஸ்தானுக்கு பெருமளவில் ட்ரோன்களை கொடுத்து உதவியது. இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது.
இந்நிலையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தான் பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது.