
சென்னை: திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகுதொலைவில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மக்களின் நலனுக்கு ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லாமல், இன்று தன் மகனையும், அவரது கூட்டாளிகளையும் காப்பாற்ற, டெல்லி செல்ல ‘நிதி ஆயோக்’ பெயரை பயன்படுத்தும் சந்தர்ப்பவாத முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ரகுபதி மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வாழ்வளித்த இயக்கத்தையும், அரசியல் அங்கீகாரம் தந்த ஜெயலலிதாவையும், காட்டிக் கொடுத்து, தீய சக்தி திமுகவில் தஞ்சமடைந்து தனது வாழ்வை மேலும் வளப்படுத்திக்கொண்டு, எஜமான விசுவாசத்தைக் காட்ட முயற்சிக்கிறார்.