
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம், ஷிங்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். கெய்கர் சந்தீப் பாண்டுரங் என்ற இந்த வீரர் மகாராஷ்டிர மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த மோதலில் மேலும் இரு வீரர்கள் காயம் அடைந்தனர்.