
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், 'தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட்' மாநாடு, வரும் மே 25-ம் தேதி திருச்சி ராணுவ மைதானத்தில் நடத்த இருப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சிந்தூர் ஆப்ரேஷன் போரில் வெற்றி கண்ட ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக 'தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட்' என்ற தலைப்பில், வரும் மே 25-ம் தேதி திருச்சி ராணுவ மைதானத்தில் மிகப்பெரிய மாநாடு நடத்தி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இருக்கிறோம்.