
சென்னை: அமெரிக்காவில் நடந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மனநல சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நாள்தோறும் மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியால், உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் தாக்கம்’ குறித்த தலைப்பில் பேசியதாவது: