• May 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டாஸ்மாக்கில் நடைபெற்ற ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாளர்கள் 2 பேர் 8-வது முறையாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபர் ரத்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 நாட்களாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *