
சென்னை: தாம்பரம் – கடற்கரை மார்க்கத்தில் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் திடீரென புகை வந்ததால், பயணிகள் பதட்டமடைந்தனர்.
இதற்கிடையில், அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் பின்னால் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ரயில்வே கோட்டத்தில் கடற்கரை – தாம்பரம் வழித்தடம் முக்கியமான உள்ளது. இந்த வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.