
சென்னை: சென்னையில் தனியாக வசிக்கும் முதியோர்களின் பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மாதம் 28-ம் தேதி உச்சிமேடு மேகரையான் தோட்டம் என்ற இடத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (72) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (63) கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதோடு, அவர்கள் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது.