
திருநெல்வேலி: “ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்று சேர வேண்டும். பாஜக கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாகுபாடில்லாமல் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். அன்புமணி ராமதாஸ்- ராமதாஸ் பிரச்சினையின் பின்னணியில் பாஜக இல்லை” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் செய்யப்பட்டு வரும் வெள்ளித் தேர் திருப்பணிக்காக ஒரு கிலோ வெள்ளியை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையாவிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் செய்யப்படும் வெள்ளித்தேருக்கு பக்தர்களால் 175 கிலோவுக்கு மேலாக உபயமாக வெள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.