
திண்டுக்கல்: கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொடைக்கானல் அருகே மன்னவனூரில் நடந்த ராட்சத காற்றாடி திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 62-வது மலர் கண்காட்சி வரும் மே 24-ம் தேதி தொடங்கி, ஜூன் 1-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி முன்கூட்டியே கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை இணைந்து பாரா செயிலிங், லேஷர் லைட் ஷோ, ஆடல் பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.